சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை டாப்சி தமிழில், தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி, பாலிவுட்டிலும் போய் அங்கும் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார்.
கதாநாயகர்களுக்கு இணையாக டாப்சியின் படங்களும் வசூல் குவிக்கின்றன. அதோடு சர்ச்சை கருத்துக்களையும் துணிச்சலாக வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழச்சிக்கு சென்ற டாப்சியை ரசிகர்கள் சூழ்ந்து செல்பி எடுக்க முண்டியடித்தனர். சிலர் புகைப்படம் எடுக்கவும் பின்னால் ஓடினர். ஆனால் போட்டோவுக்கு போஸ் கொடுக்க டாப்சி மறுத்து விட்டார்.
இதுகுறித்து காட்டமாக பேசிய டாப்சி, “நான் நடிகை மட்டும் தான், பொதுச்சொத்து அல்ல. நடிகைக்கும் பொது சொத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கேமராக்களோடு என் பின்னால் படையெடுத்து வருகிறார்கள் படம் எடுப்பதாக என்மேல் வந்தும் விழுகின்றனர்.
இதுபோல் நடந்து கொள்வது தவறு. புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று யாரேனும் மறுத்தால் அவர்கள் முடிவை கவுரவிக்க வேண்டும் நான் இப்படி பேசுவதால் சிலர் தவறாக புரிந்து கொள்ளலாம்.
அப்படியானால் ஏன் கதாநாயகியாக நடிக்கிறாய் என்றும் விமர்சிக்கலாம்.
நடிப்பு எனக்கு பிடித்த தொழில். அதனால்தான் படங்களில் நடிக்கிறேன். அதற்காக நீங்கள் என்ன செய்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்றார்.