தந்தை-மகன் பாசப் போராட்டத்தைச் சொல்லும் ‘ராஜபுத்திரன்’!

90 காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி மனதை வருடும் அழகிய காதலுடன் தந்தை மகன் பாசப் போராட்டத்தை உணர்வுப் பூர்வமாக எதார்த்தத்தை மீறாமல் மனதுக்கு மிக நெருக்கமாகப் பதிவு செய்து இருக்கிறார் படத்தின் இயக்குநர் மகா கந்தன்.

கன்னடத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் கோமல் குமார் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் இளைய திலகம் பிரபு, வெற்றி, ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், தங்கதுரை, இமான் அண்ணாச்சி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார், டி.ராஜேந்தர் ஒரு பாடலை பாடியுள்ளார். ஏஐஸ் நௌஃபல் ராஜா இசையமைத்துள்ளார் ஒளிப்பதிவு ஆலிவர் டெனி மேற்கொள்கிறார்.

கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எம்.சஃபி தயாரித்துள்ளார். 

இப்படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் மகாகந்தன், “ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம்.

அனைவரும் விரும்பக்கூடிய ஒரு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அனைவருக்கும் பிடித்த படமாக ராஜபுத்திரன் நிச்சயம் இருக்கும்” எனக் கூறினார்.

இந்தப் படம் ஏப்ரலில் திரைக்கு வர இருக்கிறது என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment