ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது ‘கோலி சோடா ரைசிங்’!

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில், ‘கோலி சோடா ரைசிங்’ என்ற புதிய வெப் தொடர் வரும் செப்டம்பர் 13-ம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

விஜய் மில்டன் இயக்கும் இந்த வெப் தொடர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரித்துள்ளார்.

இந்த வெப் தொடரில் நடிகரும் இயக்குநருமான சேரன், நடிகர் ஷாம், ‘குக் வித் கோமாளி’ புகழ்,  அம்மு அபிராமி, ரம்யா நம்பீசன், பரத் சீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், சீதா, மதுசூதனன் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த வெப் தொடர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி என 7 மொழிகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Comments (0)
Add Comment