மீண்டும் வடிவேலுவுடன் இணைந்த பகத் பாசில்!

மாமன்னன் படத்தைத் தொடர்ந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் 98-வது படமாக இதனைத் தயாரிக்‍கிறது.

அறிமுக இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி இயக்கும் இந்தப் படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி காட்சிகளைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் தலைப்பு, ரிலீஸ் மற்றும் இதர அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்‍கப்படுகிறது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment