காந்தா: மனித உணர்வுகளின் ஆழத்தைக் காட்டும் கதை!

நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காந்தா’.

சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமான, ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியாவின் முதல் படமான  ‘காந்தா’ படத்தின் படப்பிடிப்பைத் நடிகர் வெங்கடேஷ் தொடங்கி வைத்துள்ளார்.

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர். படம் குறித்துப் பேசிய நடிகர் துல்கர் சல்மான், “இது மனித உணர்வுகளின் ஆழத்தைப் படம் பிடித்துக் காட்டும் அழகான கதை” என்றார்.

Comments (0)
Add Comment