‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டம் துவக்கம்!

தமிழக அரசின் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்கும், ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளை கௌரவிப்பதற்குமான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு.சி. ஜோசப் விஜய் அவர்களை தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர், வேந்தர் மற்றும் வேல்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே கணேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

முதலமைச்சருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்ற டாக்டர் ஐசரி கே. கணேஷ், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து அவரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

தமிழக அரசின் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்கும், ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளை கௌரவிப்பதற்கும் முதலமைச்சர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment