பிரசாந்த் பாண்டியராஜ் – சூரி கூட்டணியில் புதிய படம்!

2017-ம் ஆண்டு வெளியான ‘புரூஸ்லி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரசாந்த் பாண்டியராஜ்.  இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார், கிரிதி கர்பந்தா, பால சரவணன், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கிய ‘விலங்கு’ வெப் தொடரில் விமல், பால சரவணன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் வெப் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது பாண்டியராஜ் இயக்கும் அடுத்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். ‘கருடன்’ படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் கே. குமார் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment