இல்லாத ஒன்றை இருப்பதாய் உணர வைப்பதே அற்புதமான படைப்பு!

இயக்குநர் மார்க் ஆஸ்போர்ன்

அனிமேஷன் படங்களுக்கு ஸ்ட்ரீமிங் தளங்கள் ஒரு வரப்பிரசாதம் என்றாலும், அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பில் எப்போதும் காணப்படும் மிகப்பெரிய பாணி உணர்ச்சிகரமான கதை சொல்லல் ஆகும் என அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளரும் அனிமேட்டருமான மார்க் ஆஸ்போர்ன் கூறியுள்ளார்.

கோவாவில் நடைபெற்ற இந்தியாவின் 53வது சர்வதேச திரைப்பட விழாவில், ‘அனிமேஷன் அஸ் எ டூல் ஃபார் எக்ஸ்பிரஷன்’ என்ற தலைப்பிலான மாஸ்டர் கிளாஸ் அமர்வுக்கு அவர் தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய அவர், ஓடிடி தளங்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய ரசிகர்களுக்கான உள்ளடக்கத்தை உருவாக்குவது வழக்கமான மரபாக இருக்கப்போகிறது.

ஆனால், படம் மக்களுடன் இணைக்கப்பட்டு அவர்களின் இதயங்களைத் தொட வேண்டும்” என்று கூறினார்.

இதுபோன்ற உள்ளடக்கத்தை உருவாக்க, உங்களுக்கு எது அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்பதைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.

அனிமேஷனின் ஆற்றலை வலியுறுத்திய மார்க், அனிமேஷன் என்பது எந்தக் கதையையும் சொல்லக்கூடிய பரந்து விரிந்த ஊடகம் என்றும் கூறினார்.

“இல்லாத ஒன்றைப் பற்றி யாரோ ஒருவரை உணர வைப்பது உண்மையிலேயே அற்புதமானது. அனிமேஷனின் மாயாஜாலத்தை நீங்கள் பார்க்கும்போது அது இறுதியில் உயிர்ப்பிக்கப்படுவதை நாங்கள் உணர்கிறோம்’’ என்கிறார் அவர்.

“அனிமேஷனைப் பொறுத்தவரை, திரைக்கதையை கடைசி தருணம் வரை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது. அது இன்னும் பரிணமித்து மாறப் போகிறது.

“கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளை ஆதரிப்பது அற்புதங்கள் நடக்க உதவும். அனிமேஷனை உருவாக்க, கலைஞர்களுக்கு பாதுகாப்பான இடம் தேவை” என்று அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு கண்ணோட்டம் மற்றும் வாழ்க்கை அனுபவம் இருக்கும். இந்தத் தனிப்பட்ட பயணத்தையும் அனுபவத்தையும் திரைப்படத் தயாரிப்பில் கொண்டு வருவது மிக முக்கியமானது என்று கூறிய மார்க் ஆஸ்போர்ன், Antoine de Saint – Exupéry எழுதிய நாவலைத் தழுவி The Little Prince திரைப்படத்தை உருவாக்குவதில் தனது பயணம் குறித்தும் விரிவாக விளக்கினார்.

Comments (0)
Add Comment