கோகுல் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்!

“இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” பட இயக்குனர் கோகுல் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார்.

லால் சலாம் படத்தைத் தொடர்ந்து ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக இவரது நடிப்பில் மோகன்தாஸ் திரைப்படம் உருவாகி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இவர் கதாநாயகனாக நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையில் இயக்குனர் கோகுல், சிம்புவை வைத்து கொரோனா குமார் என்ற படத்தை இயக்க இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

தற்போது ஆர்.ஜே. பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளர். அது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் அடுத்த படத்திற்கான கதையை விஷ்ணு விஷாலிடம் கூறி அந்தக் கதை ஓகே ஆகி உள்ளதாகவும் திரைக்கதை பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

எனவே கோகுல் – விஷ்ணு விஷால் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாக உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment