‘கூலி’ படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்?

‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘லியோ’, விக்ரம் என தொடர் வெற்றிப் படங்களை அளித்த லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினியின் கூலி படத்தை இயக்கி வருகிறார்.

ரஜினியின் 171 – வது படமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் கூலி படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் சன் நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படமாகும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொடங்கியது. பின்னர் சென்னையில் ஆக்ரோஷமான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கினார்கள்.

‘கூலி’ படத்தில் ரஜினி கதாபாத்திரத்தின் பெயர் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயர் ‘தேவா’.

அண்மையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று உடல் நலம் தேறி மீண்டும் கூலி படத்தின் படப்பிடிப்பு பணியில் இணைந்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.

அண்மையில் அமரன் வெற்றிக் விழாவின் நேர்காணல் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், நான் அடிக்கடி லோகேஷ் கனகராஜை சந்திப்பேன். எனது வீட்டிற்கு எதிரில்தான் கூலி படத்தின் படம்பிடிப்பு பணிகள் நடைபெறுகிறது. அமரன் படத்தின் புரமோஷன் வேலைகளில் இருந்ததால் அங்கு செல்லவில்லை.

கூலி படப்பிடிப்புக்கு இனிமேல்தான் செல்ல வேண்டும். இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை. தலைவர் ரஜினி நடிக்கும் திரைப்படம் கூலி அவ்வளவு தான். தவறான செய்திகளைப் பரப்ப வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

Comments (0)
Add Comment