காத்திருக்கிறேன், காதலைக் கொண்டாடிய படத்திற்காக!

- பிருந்தா சாரதி நெகிழ்ச்சி

ஏப்ரல் 2 இல் ‘பையா’ வெளியாகி 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏப்ரல் 11 இல் தமிழ்நாடு முழுவதும் இவ்வாண்டு வெளியாகிறது. பயணம், காதல், துள்ளல் என இப்படத்தில் வசனம் எழுதியது மறக்க முடியாத அனுபவம்.

இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தை இயக்குனர்களே பாராட்டிய படம். முழுக்க முழுக்க ‘ரோட் முவி’ என்பது அசாத்திய செயல். ஷாட் பகுப்பில் ஏற்கெனவே பழகிய படி இல்லாமல் புதுமையைச் செய்திருப்பதை தொழில் நுட்பம் அறிந்தவர்கள் உணர்ந்து பாராட்டினர்.

இரண்டரை மணி நேரம் காதல் உணர்வில் லயிக்க வைத்த படம். வசனத்தின் மூலமாகவே திரைக்கதை நகரும். அந்த விதத்தில் இது ஒரு குறிப்பிடத்தகுந்த திரைக்கதை அமையப் பெற்ற படம்.

தெலுங்கில் ‘ஆவாரா’ என்ற பெயரில் வெளியாகி அங்கும் வெற்றி பெற்றது. கார்த்தி, தமன்னாவின் இளமை.. அதுவும் கார்த்தியை ஸ்டைலிஸ் லுக்கில் ஆக்ஷ்ன் ஹீரோவாக களமிறங்கிய படம்.

யுவனின் இசை, முத்துக்குமாரின் பாடல்கள், மதியின் ஒளிப்பதிவு எல்லாம் க்ளாஸ். ஏப்ரல் 11 க்காக காத்திருக்கிறேன். மீண்டும் திரையரங்கில் ‘பையா’வைச் சந்திக்க..

படத்தில் தமன்னாவுக்குப் பிடித்த வசனம்: கார்த்தி நண்பர்களிடம் (அலைபேசியில்): “பெங்களூரில் இருந்து பாம்பே வரைக்கும் இவ்வளவு தூரம் கொண்டுவந்து விட்டிருக்கேன். அது ஒரு தூரமாவே தெரியல.. இப்ப அவள வீட்ல விட்டுட்டு கேட் வரைக்கும்தான்டா வந்து இருக்கேன்.. இந்த தூரம் பெரிய தூரமா இருக்குடா..’

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment