நான் கடந்து வந்த பாதைகள் கடினமானவை!

ஆவணப் படத்தில் பேசியுள்ள நயன்தாரா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜவான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் பெரும் சாதனை படைத்தது.

நயன்தாரா, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2022-ம் ஆண்டு நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவனை மகாபலிபுரம் ரிசார்ட் ஹோட்டலில் விமர்சையாக திருமணம் செய்து கொண்டார்.

அப்போது Netflix ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு திருமண கிளிம்ஸுடன் வெளியானது.

அதன் பிறகு ‘நயன்தாரா பியாண்ட் தி பேரி டேல்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், நவம்பர் 18ம் தேதி வெளியானது.

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவணப் படத்தை வெளியிட்டது.

இதில், நயன்தாராவின் காதல் வாழ்க்கை, தனிப்பட்ட நிகழ்வுகள், அன்பு நிறைந்த திருமண தருணங்கள் மற்றும் விக்னேஷ் சிவனுடனான அவரது வாழ்க்கையைப் பற்றி விரிவாக காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆவணப் படத்தில் நயன்தாரா தனது வாழ்வில் அவர் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள், மோசமான நாட்கள் என பல அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

மிக முக்கிய அவர் 2011 முதல் 2013 வரை திரைப்படங்களில் நடிக்காமல் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். இதற்கான காரணத்தை அவர் இதுவரை பொதுவெளியில் எங்கும் சொல்லாமல் இருந்தார்.

இந்நிலையில் இந்த ஆவணப் படத்தின் மூலம் பேசிய நயன்தாரா, “நான் முந்தைய உறவில் இருந்தபோது, அந்த நபர் என்னை சினிமாவிலிருந்து விலகச் சொன்னார்.

எனக்கு ஒரு ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டது. அது சினிமாவிலிருந்து விலகுவதுதான். அப்போது அதனை எதிர்கொள்வதற்கான முறையான பக்குவம் எனக்கு இல்லை.

இரண்டு வருடங்கள் கழித்து என்னை நானே பலப்படுத்திக் கொண்டிருந்தபோது தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவிடம் இருந்து அழைப்பு வந்தது, ராம ராஜ்ஜியம் படத்தில் சீதாவாக நடிக்க அழைப்பு விடுத்தார். அதன்பின்னர் ராஜா ராணி படத்திற்கான அழைப்பும் வந்தது” என தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment