‘லால் சலாம்’ படத்தை முடித்து விட்ட ரஜினிகாந்த், இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
‘தலைவர் 170’ என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தை த.செ. ஞானவேல் டைரக்டு செய்கிறார்.
‘பான் இந்தியா’ படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் பிரபலமான நட்சத்திரங்கள் இதில் நடிக்கின்றனர்.
அமிதாப்பச்சன், ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் குறிப்பிடத்தக்க நட்சத்திரங்கள்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் ரஜினி, முஸ்லீம் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
திருவனந்தபுரத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம் ஆனது. பின்னர் நெல்லை மாவட்டம் பணகுடியிலும், மும்பையிலும் படப்பிடிப்பு நடந்தது.
இப்போது சென்னை பிரசாத் லேப்பில் பிரமாண்ட அரங்கில் உச்சக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஒரு வாரம் ஷுட்டிங் நடக்கிறது. ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ‘அவுட்டோர்’ படப்பிடிப்பு.
ஜனவரி 24-ம் தேதியுடன் ஷுட்டிங் நிறைவடைகிறது. இதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.
– பாப்பாங்குளம் பாரதி