தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த கயடு லோஹர்!

‘DRAGON’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள கயடு லோஹர், 2021-ல் ‘முகில் பேட்டை’ கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, மராத்தி மொழிகளில் ஐந்தாறு படங்கள் நடித்திருக்கிறார். இருந்தாலும் ‘DRAGON’ படம் அவரை எங்கேயோ கொண்டுப் போய் விட்டது.

அஸ்ஸாம் மாநிலம் தேஜ்புரைச் சேர்ந்த கயடு லோஹர் பூனாவில் தங்கி இதுவரை நடித்து வந்தார். தமிழ் உட்பட தென்னகத்தில் கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து சென்னையில் குடியேற நினைத்துள்ளார்.

சிம்ரன், திரிஷா, சமந்தா போல தமிழில் வளர வாய்ப்புள்ள நடிகையாக இருக்கிறார், பி. காம் பட்டதாரியான கயடு லோஹர். ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வா ஜோடியாக தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

Comments (0)
Add Comment