அடுத்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ‘அரண்மனை-4’!

இயக்குநர் சுந்தர்.சி-யின் இயக்கத்தில் 2014-ல் வெளியான ‘அரண்மனை’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்‌ஷ்மி, வினய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக 2016-ல், த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து ‘அரண்மனை – 2’ படத்தை இயக்கினார் சுந்தர்.சி.

இந்தப் படமும் வசூலைக் குவித்ததைத் தொடர்ந்து 2021-ல் ‘அரண்மனை – 3’ எடுக்கப்பட்டது. இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக தற்போது, ‘அரண்மனை 4’ படத்தை சுந்தர்.சி இயக்கி வெளியிட்டுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, நடிகைகள் ராஷி கண்ணா, தமன்னா ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மே 3 -ம் தேதி இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் 3-ம் பாகத்தை விட இந்தப் படம் பரவாயில்லை என்கிற கருத்துகளையும் பெற்றது.

இப்படம் வெளியான 19 நாள்களில் உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அரண்மனை 4 திரைப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. இதனிடையே ‘அரண்மனை 4’ ஜூன் 14 ஆம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Comments (0)
Add Comment