லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தில் அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பான் இந்தியப் படமாக உருவாகும் விடாமுயற்சிக்கு அனிருத் இசையமைக்கிறார்.
அண்மையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்தது.
இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில் இப்படத்திற்காக டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார் நடிகர் அஜித்.
இந்தப் படம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பொங்கல் ரேஸில் சேர்ந்துள்ளது.
எனவே ‘விடாமுயற்சி’யின் வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்படாமல் உள்ளது. இதனிடையே, ‘விடாமுயற்சி’ படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு வரும் 13-ம் தேதி தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.