யாஷிகா ஆனந்த் நடிக்கும் ஹாரர் படம் சைத்ரா!

மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் என்ற புதிய படம் நிறுவனம் மற்றும் கண்ணன் வரதராஜ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படத்திற்கு “சைத்ரா” என்று பெயரிட்டுள்ளனர். படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிகண்டன், விஜயலட்சுமி ஆகியோரது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார். பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்தப் படத்திற்கும் பணியாற்றியுள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் M. ஜெனித்குமார். இவர் பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

படம் பற்றிப் பேசிய இயக்குனர் ஜெனித்குமார், “24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது. பீட்சா, டீமாண்டி காலணி மாதிரியான வித்தியாசமான திரைக்கதையை வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

இதுவரை யாரும் பார்த்திராத பரபரப்பான சம்பவங்களுடன் முழுக்க முழுக்க திரில்லர் கலந்த ஹாரர் படம் இது. படப்பிடிப்பு முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் கிணறு பகுதியில் படமக்கினோம் படம் நவம்பர் 17 ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக இருக்கிறது” என்றார்.

Comments (0)
Add Comment