ஸ்ருதி – கமல் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசைப்படைப்பு!

‘உலகநாயகன்’ கமல்ஹாசனும், அவரது வாரிசும் பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் ஒரு புதிய இசை படைப்பொன்றில் இணைந்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஒரு புதிய இசை படைப்பினை உருவாக்கவிருப்பதாக ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் அண்மையில் ‘என்னிடம் கேள்வி கேளுங்கள்’ என்றொரு அமர்வை தொகுத்து வழங்கினார். அப்போது அவரது ரசிகர் ஒருவர், ‘உங்களது தந்தையுடன் இணைந்து பணியாற்றும் இசை படைப்பு குறித்த அப்டேட் ஏதாவது இருக்கிறதா? என அவரிடம் கேள்வி எழுப்பினார்.

தனது உற்சாகத்தைப் பகிர்ந்துகொண்ட ஸ்ருதிஹாசன், ”அது ஒரு மியூசிக்கல் ப்ராஜெக்ட். அது என்ன என்பதை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறோம்” என்றார்.

துபாயில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த பாடகருக்கான விருதினை கமல்ஹாசனுக்கு, ஸ்ருதிஹாசன் வழங்கிய போது மேடையில் இருந்த நடிகர் கமல்ஹாசன், இத்திட்டத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

ஸ்ருதிஹாசன் இதற்கு முன் ‘எட்ஜ்’ , ‘ஷீ இஸ் எ ஹீரோ’ எனும் இரண்டு சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். இது பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தனது மூன்றாவது சுயாதீன இசை ஆல்பத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். இது குறித்த எதிர்பார்ப்பும், ஆர்வமும் ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

Comments (0)
Add Comment