‘தேவர் மகன்’ (1992) படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவாகும். இந்தப் புகைப்படத்தை நான் பாதுகாத்து வருகிறேன்.
கமல் ஹாசன் தயாரித்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதில் நான் தலைவாசல் விஜயின் மனைவியாக (கமல் ஹாசன் அவர்களின் அண்ணி)யாக நடித்தேன்.
தமிழ் சினிமாவின் இரண்டு மாமன்னர்களான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கமல் ஹாசன் ஆகியோருடன் நடித்தேன்.
இந்தப் படத்தில் நான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் இரண்டாவது முறையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
(சின்ன மருமகள் திரைப்படம் முதல் அனுபவம்)
இந்தப் படத்துக்கு அற்புதமான கதை மற்றும் திரைக்கதை இருந்தது, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து, இளையராஜா இசையமைத்தார், பரதன் இயக்கினார்.
இந்தத் படம் என் சினிமா வாழ்கையில் மிக முக்கியமானதாக இருந்தது, ஏனெனில் ரேவதி, கவுதமி, நாசர், காகா ராதாகிருஷ்ணன், கள்ளபார்ட் நடராஜன் மற்றும் வடிவேலு போன்ற திறமையான நடிகர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. வடிவேலு அவரது ஆரம்பகாலத்தில் இருந்தார்.
அவ்வளவு சீனியர் நடிகர்களின் முன்னிலையில் நடிக்க இது சவாலான, அனுபவமாக இருந்தது.
கே.பாலசந்தர் சார் அவர்களின் வலது கை அனந்து சார் தான் இந்தப் படத்தில் எனக்கு இந்த வேடத்தை பெற்று தந்தார்.
இந்தப் படத்தில் நடித்த சமயத்தில் கிடைத்த பல நட்புகள் இன்று வரை தொடர்கிறது. சமீபத்தில், பகத் பாசில் படத்தில் நானும் வடிவேலுவும் தேவர் மகனுக்கு பிறகு நடித்தோம், என்னை பொறுத்தவரை வடிவேலு கொஞ்சம் கூட மாறவில்லை.
ஆரம்பக் காலத்தில் எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு இந்த ‘தேவர் மகன்’ திரைப்படம்.
-நன்றி ரேணுகா முகநூல் பதிவு.
#தேவர்_மகன் #Devarmagan #புகைப்படம் #Photo #கமல்ஹாசன் #Kamalhaasan #நடிகர்_திலகம்_சிவாஜி_கணேசன் #Nadigar_Thilagam_Sivaji_Ganesan #தலைவாசல்_விஜய் #Thalaivasal_vijay #ரேவதி #Revathi #கவுதமி #Gowdami #நாசர் #Nasar #காகா_ராதாகிருஷ்ணன் #Kaka_Radhakrishnan #கள்ளபார்ட்_நடராஜன்# Kallappart_TR_Nadarajan #வடிவேலு #Vadivelu