மீண்டும் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் கௌதமி!

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை கௌதமி. இவர் ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நாயகியாக நடித்து தனக்கென சினிமாவில் தனி இடம் பெற்றவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிப் படங்களில் நடித்தவர். சிறிது காலம் சினிமாவை விட்டுத் தள்ளி இருந்தார் கௌதமி.

அதன்பின், கடந்த 2015-ம் ஆண்டு கமல்ஹாசனுடன் ‘பாபநாசம்’ படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

இதற்கிடையில், சின்னத் திரையில் ஏற்கனவே இந்திரா, அபிராமி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். அத்துடன் தொடர்களில் நடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்களில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் கௌதமி.

அதன்படி, நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதைப் பற்றிய புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Comments (0)
Add Comment