சூர்யாவின் 45-வது படத்தில் நடிக்கும் காஷ்மிரா பர்தேசி?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. மிகுந்த எதிர்பார்ப்போடு உருவாகியுள்ள இந்தப் படம் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44-வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதையடுத்து சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க உள்ளதாகவும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் கிராமத்துக் கதைக்களத்தில் உருவாவதாகக் கூறப்படுகிறது.

சூர்யா-45 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிக்கும் நாயகி உள்ளிட்ட பிற நடிகர்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இதில் சிவப்பு மஞ்சள் பச்சை மற்றும் பிடி சார் போன்ற படங்களில் நடித்த காஷ்மிரா பர்தேசி,  கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

Comments (0)
Add Comment