நடிகர் சிம்பு நடித்து வெளிவந்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்களிடையே வரவேற்பையும் பெற்றது.
இதைத் தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் முடிவடையாததால், தக் லைஃப் படத்தில் இணைந்தார் சிம்பு. இப்படத்தின் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன் நிறைவடைந்தது.
அதன்பின் தன்னுடைய 48-வது படத்தின் தயாரிப்பிலிருந்து ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் விலகியதாகக் கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 49-வது படத்தின் அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வரும் பிப்ரவரி மாதம் 3-ம் தேதி வெளியாகும் என சிம்பு அறிவித்துள்ளார்.
இது சிம்புவின் 50-வது படமாக இருக்குமா, இல்லை தேசிங்கு பெரியசாமி படத்திலிருந்து விலகி 48-வது படத்தை அறிவிக்கிறாரா என்றும் யார் இயக்குநர் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.