அநீதி படத்தில் எனது கதாபாத்திரம் கொண்டாடப்படுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் காளி வெங்கட் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் அநீதி திரைப்படம் கடந்த ஜூலை 21-ம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக துசாரா விஜயன் நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இயக்குநர் சங்கர் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் கடந்த 15-ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.
ஓ.டி.டி.யில் வெளியானதில் இருந்தே நடிகர் காளி வெங்கட்டின் கதாபாத்திரம் வெகுவாகப் பேசப்பட்டு வந்தது. அவரின் நடிப்பும் மொழிநடையும் அனைவருக்கும் பிடித்துப் போக, சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வந்தனர்.
இந்த நிலையில் அநீதி படத்தில் எனது கதாபாத்திரம் கொண்டாடப்படுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் காளி வெங்கட் தெரிவித்துள்ளார். தன்னை பாராட்டி வரும் அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார் காளி வெங்கட்.
அதோடு, தயாரிப்பாளர் சங்கர், இயக்குநர் வசந்தபாலன் உள்பட படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
– தேஜேஷ்