நகைச்சுவை நடிப்பை நாகரீகமாக ஆக்கியவர் சந்திரபாபு!

-நடிகர் சந்திரபாபு மறைந்த போது மனோரமா!

சந்திரபாபுவை முதன்முதலாக கோயம்புத்தூரில் நடந்த ஒரு விழாவில் நடிகை எல்.விஜயலட்சுமி தான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சந்திரபாபு தனக்கொன ஒரு பாணியை வைத்திருந்தார்.

அவருக்குத் தெரியாததே இல்லை எனலாம். பாட்டு, டான்ஸ், நடிப்பு எல்லாவற்றையும் பிரமாதமாகச் செய்வார். பேன்ட், கோட் போட்டுக் கொண்டு நகைச்சுவை நடிப்பை நாகரிகமாக்கியவரே அவர்தான் அவர் பாடிய பாடல்களை யாராலுமே மறக்கமுடியாது.

அவர் மறைவதற்கு இரண்டு நாள் முன்பு நான் சேலத்தில் இருந்தேன். அப்போது என் மகனிடம் அவரைப் பற்றி இரவு ஒரு மணி வரையில் பேசிக் கொண்டு இருந்தேன்.

அவர் பாடின பாட்டுக்களையெல்லாம் பாடிக் காண்பித்தேன். இது ஏதோ எதேச்சையாகத்தான் நடந்தது.

சேலத்திலிருந்து சென்னை வந்ததும், ‘சந்திரபாபு மறைந்துவிட்டார்’ என்ற செய்தி என்னைத் திகைக்க வைத்தது. என்னால் நம்பவே முடியவில்லை.

#நடிகர்_சந்திரபாபு #Actor_Chandrababu #மனோரமா #Manorama #கோயம்புத்தூர் #Coimbatore #நடிகை_எல்_விஜயலட்சுமி #Actress_L_Vijayalakshmi #பாடல் #Song #டான்ஸ் #Dance #நடிப்பு  #Acting #நகைச்சுவை #Comedy

 

Comments (0)
Add Comment