22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று (19.12.2024) மாலை நடைபெற்றது. இந்த விழா டிசம்பர் 12 முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது.
தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் நடத்தும் இந்த விழாவில் 180 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
நிகழ்ச்சியின் முடிவில் சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டன.
அதன்படி சிறந்த படமாக ‘அமரன்’ படத்திற்கு விருது கிடைத்துள்ளது. அத்துடன் இப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும், தயாரிப்பாளர் மகேந்திரனுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
சிறந்த படம் (இரண்டாம் படமாக): ‘லப்பர் பந்து’ – இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் லக்ஷ்மணன் ஆகியோருக்கு தலா ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இதில் நடித்த ‘அட்டகத்தி’ தினேசுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்தது.
சிறந்த நடிகர்: ‘மகாராஜா’ திரைப்படத்துக்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு விருதுடன் ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
சிறந்த நடிகை: ‘அமரன்’ திரைப்படத்துக்காக நடிகை சாய் பல்லவிக்கு விருதுடன் ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகை: துஷரா விஜயன் (வேட்டையன்)
சிறந்த இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார் (அமரன்)
மக்களுக்கு பிடித்த நடிகர்: அரவிந்த் சாமி (மெய்யழகன்)
மக்களுக்கு பிடித்த நடிகை: அன்னா பென் (கொட்டுக்காளி)
சிறந்த பொழுதுபோக்குப் படம்: வேட்டையன்
சிறந்த இளம் கலைஞருக்கான அமிதாப்பச்சன் விருது : அருள்நிதி
சிறந்த கலை இயக்குனர்: மூர்த்தி (தங்கலான்)
சிறந்த கதை: நித்திலன் சாமிநாதன் (மகாராஜா) உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.