இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்தில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் ரவிசந்திரன் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்த நிலையில் இதற்கிடையே சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தையும் முருகதாஸ் இயக்கி வருகிறார்.
இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. சஜித் நாடியத்வாலா தயாரிக்கும் இதில் சத்யராஜ், ராஷ்மிகா மந்தனா உட்பட பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் நிலையில் சல்மான் கான் இரட்டை வேடங்களில் நடிப்பதாகத் தெரிகிறது.
ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்துக்காக, 10 ஆயிரம் டம்மி கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை ஆர்டர் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.