ஒரு காட்சிக்கு 8 டேக்குகள் எடுத்த நயன்தாரா!

நேர்காணலில் நெகிழ்ந்த யோகிபாபு

நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் அவருக்கு மட்டுமல்ல, அதன் நாயகி நயன்தாராவுக்கும் ஒரு முத்திரைப் படம். இந்தப் படம் நயன்தாராவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.

2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் பின்னர் 2022 இல் ஜான்வி கபூர் நடிப்பில் ‘குட் லக் ஜெர்ரி’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், அந்தப் படத்துக்கு ‘குட் லக்’ இல்லாமல் போனது. படம் வெற்றி பெறவில்லை.

‘கோலமாவு கோகிலா ‘ஷுட்டிங்கின் போது நடந்த சம்பவத்தை நகைச்சுவை நடிகர் யோகிபாபு,  செய்தியாளர் ஒருவரிடம் பகிர்ந்துள்ளார்.

அந்த உரையாடலில் நயன்தாராவின் தொழில் அர்ப்பணிப்பை நெகிழ்ச்சியோடு  விவரித்தார்.

யோகிபாபுவின் நேர்காணல் இங்கே;

“நயன்தாரா நிஜமாகவே ஒரு லேடி சூப்பர் ஸ்டார் தான். என்னைப் போன்ற காமெடி நடிகருடன் அவர்  நடிப்பதே பெரிய விஷயம்.

கோலமாவு கோகிலாவில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. காட்சியின்படி கார் ஸ்பீட் பிரேக்கரில் ஏறும்போது நயன்தாராவின் கால் என் முகத்தில் பட வேண்டும்.

ஆனால் நயன்தாரா மறுத்துவிட்டார். எனது முகத்தில் அவரது காலை வைக்க அவருக்கு தயக்கம்.

இயக்குநர் நெல்சன் நயன்தாராவை ரொம்பவும் வற்புறுத்தினார். நானும் அந்தக் காட்சி சிறப்பாக இருக்கும் என்று சொன்னேன்.  

ஒரு வழியாக அந்த காட்சி படமாக்கப்பட்டது. ஏழு அல்லது எட்டு டேக்குகள் எடுக்கப்பட்டது.  ஆனால் ஒரு முறை கூட அவர் தன் காலை என் முகத்தில் வைக்கவில்லை.

என் முகத்தில் ஒரு சிறு அழுக்குக் கூட படாமல் இருக்க, அவர் வாஸ்லின் தடவிக்கொண்டு, காலை தரையில் வைக்காமல் தூக்கியே வைத்திருந்தார்.

நயன்தாரா மீது இன்னும் நான் அதீத மதிப்பு வைத்திருப்பதற்கு அந்த நிகழ்வு ஒரு காரணம்” என்று கூறி பழைய நினைவுகளில் மிதந்தார் யோகிபாபு.

_ பாப்பாங்குளம் பாரதி

 

Comments (0)
Add Comment