நடிகர் விஜய் துவங்கி வைத்த ‘வித்தைக்காரன்’! 

அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகனாக நடிக்கும், வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம்  “வித்தைக்காரன்”.

காமெடி நடிகராக அறிமுகமாகி வெற்றிகரமான நாயகனாக வலம் வரும் சதீஷ் இப்படத்தில் நாயகானாக நடித்துள்ளார். நாயகியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார்.

இவர்களுடன் ஆனந்த்ராஜ், மதுசூதனன் ராவ், சுப்பிரமண்ய சிவா, ஜான் விஜய், ஆஷிஃப் அலி, பாவெல், ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், திரைப்படக் குழுவினர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சதீஷ், தளபதி விஜய் தான் இந்தப் படத்தை துவங்கி வைத்தார். அவருக்கு என் முதல் நன்றி. என்னை சமீபத்தில் சந்தித்தபோது கான்ஜூரிங் கண்ணப்பன் பார்த்ததாகச் சொன்னார்.

அவர் பாராட்டியது மிகப்பெரிய சந்தோஷம். இயக்குநர் வெங்கி தளபதி விஜய்யின் தீவிர ரசிகர். ‘V’ செண்டிமெண்ட் எங்களுக்கு ஒர்க் அவுட் ஆகி வருகிறது.

படம் ஆரம்பித்து வைத்த விஜய் சார், இயக்குநர் வெங்கி, பட டைட்டில் வித்தைக்காரன் என எல்லாம் ‘V’ தான்.

இப்படம் வெற்றியாக அமையுமென நம்புகிறேன். ஆனந்தராஜ் சார், இயக்குநர் சுப்பிரமணிய சிவா என எல்லோரும் நல்ல ரோல் செய்திருக்கிறார்கள். ஆனந்தராஜ் சாரை எல்லாம் சின்ன வயதில் பார்த்து பயந்திருக்கிறேன்.

இப்போது அவருடன் நடிப்பது மகிழ்ச்சி. சிம்ரன் குப்தா தமிழே தெரியாமல், டயலாக் மக்கப் பண்ணி அத்தனை அர்ப்பணிப்புடன் நடித்தார்.

படத்தைப் பற்றி பேசிய நடிகை சிம்ரன் குப்தா, தயாரிப்பாளர் விஜய் சார், இயக்குநர் வெங்கி ஆகியோருக்கு நன்றி. வித்தைக்காரன் எனக்கு முக்கியமான படம்.

எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன். எனக்கு ஆதரவு தந்த சதீஷ்க்கு நன்றி. வித்தைக்காரன் கண்டிப்பாகச் சிறந்த வெற்றி படமாக இருக்கும்; நன்றி.

ஒரு கொள்ளையும் அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களுமாக, முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி கலந்த திரைக்கதையில், வித்தியாசமான காமெடித் திரைப்படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் வெங்கி.

Comments (0)
Add Comment