வணங்கான் பட ‘டீசர்’ விரைவில் வெளியீடு!

பாலா இயக்கத்தில் உருவான ‘வணங்கான்’  திரைப்படம் ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது.

இந்தப் படத்தை முதலில் சூர்யா தயாரித்தார். அவரே ஹீரோவாக நடித்தார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென அந்தப்படம் கைவிடப்பட்டது.

ஷுட்டிங்கின் போது பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாதியில் நின்று போனது ‘வணங்கான்’. இந்தப் படத்திலிருந்து சூர்யா விலகினார்.

அப்போது இயக்குநர் பாலா வெளியிட்ட அறிக்கையில், “வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்தார். கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாக தெரிகிறது.

அருண் விஜய் ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். பாலா ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘வணங்கான் படத்தின் டீசர் வரும் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.

#நடிகர்_சூர்யா #Actor_Surya #வணங்கான் #Vanangaan_Movie #இயக்குநர்_பாலா #Director_Bala #நடிகர்_அருண்_விஜய் #Arun_Vijay #ரோஷினி_பிரகாஷ் #Roshini_Prakash #சுரேஷ்_காமாட்சி #மிஷ்கின் #சமுத்திரக்கனி #ஜி_வி_பிரகாஷ்_குமார் #suresh_kamatchi #miskin #samuthra_kani #g_v_prakash

Comments (0)
Add Comment