- நடிகர் சந்தானம்
நடிகர் சந்தானம் மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் கார்த்திக் யோகேஷ் இயக்கத்தில் இம்மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகர் சந்தானம், நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் டயலாக்கில் இடம் பெற்ற வடக்குப்பட்டி ராமசாமி என்கிற பெயரை படத்தின் டைட்டிலாக தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிட்டார்.
அடுத்தப் படத்திலும் கவுண்டமணியின் டயலாக்கை டைட்டில் ஆக வைத்துதான் படம் எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
இந்தப் படத்தின் கருத்து மத நம்பிக்கை வைத்து பணத்தை சம்பாதிக்கக் கூடாது என்பதுதான் எனவும் தமக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதாகவும் நடிகர் சந்தானம் குறிப்பிட்டார்.
– தேஜேஷ்
#நடிகர்_சந்தானம் #Actor_Santhaanam #மேகா_ஆகாஷ் #Meha_Akash #கார்த்திக்_யோகேஷ் #Karthik_Yogesh #வடக்குப்பட்டி_ராமசாமி #Vadakkuppatti_Ramasamy_Movie