‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
2018 ஆம் ஆண்டு முதல் 2020 வரை அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
அப்போது நாடக நடிகர் மைக்கேலுக்கும், அவருக்கும் இடையேயான காதல் முறிந்திருந்தது.
சினிமாவில் தனக்கு ஏற்பட்ட இடைவெளி குறித்தும், காதல் முறிவு குறித்தும் மனம் திறந்து ஸ்ருதிஹாசன் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியது:
அப்போது ஏற்பட்ட இடைவெளியில், எனக்குள் இருந்த சிறப்பான விஷயங்கள் வெளியே வந்தது.
அவரைப் பிரிந்தது சோகமாக இருந்தது. மற்றவை அனைத்தும் உண்மையில் சிறப்பாக அமைந்தது.
நான் யார் என்பதைத் தெரிந்துகொண்ட அற்புதமான நேரம் அது. எனக்கு இருந்த மனநிலை பிரச்சனைகளை சரிப்படுத்த உதவியது.
ஆனால், நான் கடுமையான பதற்றம் காரணமாக பெரிதும் அவதிப்பட்டதால், அன்றாட நடவடிக்கையில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை.
எதைத் தேடுகிறேன், நான் யார் என்பதில் எனக்கு தெளிவில்லாமல் இருந்தது. அதனால், லண்டனில் இருந்தபடியே இசையின் மூலமாக என்னை நான் மீண்டும் கண்டறிந்தேன்.
தினந்தோறும் எனது ஆடைகளை நானே துவைப்பது, எனக்கான உணவை நானே சமைப்பது, மெட்ரோ ரயிலில் பயணிப்பது, திரும்பி வந்து புதிதாக எழுத பயிற்சி செய்வது, பிறகு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த இசையை சோதித்து பார்ப்பது என்று, எனது வாழ்க்கையை மிகவும் வித்தியாசமாக அமைத்திருந்தேன்.
அதை நான் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்’ என்று அவர் தெரிவித்தார்.
– பாப்பாங்குளம் பாரதி