ஒவ்வொரு மனிதனும் குழந்தைப் பருவத்தில் இருந்து பெரியவர்கள் ஆகும் வரை முகத்தை மறைத்து கண்களை விரல் இடுக்கில் முழு படத்தையும் ஆர்வத்துடன் பார்க்கும் படங்களில் ஒன்று பேய்ப் படம்.
அதிலும் வேறு மொழி படங்கள் என்றாலே அதில் ஒரு தனி குஷி தான். அந்த வகையிலான ஒரு முழுமையான திகில் திரைபடம் தான் ஈவில் டெட் ரைஸ்.
(தி ஈவில் டெட்) பாகம்:1
சாம் ரைமி என்ற இயக்குநர் எழுதி வெளிவந்த ‘தி ஈவில் டெட்’ படம் 1981 ல் அமெரிக்காவில் வெளியானது.
ரைமி மற்றும் புரூஸ் காம்ப்பெல் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் எல்லன் சாண்ட்வீஸ் மற்றும் பெட்ஸி பேக்கர் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
படத்தின் கதை இதுதான்: ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் கிழக்கு லான்சிங் நகரத்தில் அமைந்துள்ள அரசு சார்பு பல்கலைக் கழகத்தில், ஆஷ் வில்லியம்ஸ், அவரது காதலி லிண்டா; ஆஷின் சகோதரி, செரில்; அவர்களின் நண்பர் ஸ்காட்; மற்றும் அவரது காதலி டென்னசியில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் விடுமுறைக்கு செல்கிறார்கள்.
அங்கே அவர்களுக்கு சில அமானுசுயங்கள் ஏற்படுகிறது. அதனால் அவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் கதை.
(ஈவில் டெட்) பாகம்:2
1987 ஆம் ஆண்டு சாம் ரைமி இயக்கிய நகைச்சுவை திகில் படமாக இந்தப் படம் வெளியானது. படத்தின் கதையை ஸ்காட் ஸ்பீகலுடன் சாம் ரைமி இணைந்து எழுதியுள்ளார்.
இதில் அவர் கேம்ப்பெல் ஆஷ் வில்லியம்ஸாக நடித்துள்ளார். தனது காதலியுடன் காடுகளில் உள்ள தொலைதூர அறைக்கு விடுமுறையில் செல்கிறார்.
அப்போது பழங்கால நூல்களில் இருந்து பாராயணங்களின் ஆடியோ டேப்பைக் கண்டுபிடிக்கிறார். அந்த ஒலிப்பதிவு இயக்கப்படும்போது, அது அவரைப் பிடித்துக் கொண்டு துன்புறுத்துகிறது.
(தி ஈவில் டெட்) ஆர்மி ஆஃப் டார்க்னஸ் பாகம்:3
இது 1992 ஆம் ஆண்டு வெளியான டார்க் ஃபேன்டஸி நகைச்சுவைத் திரைப்படமாகும்.
இதில், எம்பெத் டேவிட்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இக்கதையில் இடைக்காலத்தில் சிக்கி, நிகழ்காலத்திற்குத் திரும்புவதற்கான தேடலில் இறக்காதவர்களுடன் போராடுவதாக கதை அமைந்துள்ளது.
(தி ஈவில் டெட்) பாகம்:4
இந்தப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் இயக்குநர் ஃபெட் அல்வாரெசால் இயக்கப்பட்டது. ரோடோ சயாகுஸுடன் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளார்.
இதில் ஜேன் லெவி, ஷிலோ பெர்னாண்டஸ், லூ டெய்லர் புச்சி, ஜெசிகா லூகாஸ் மற்றும் எலிசபெத் பிளாக்மோர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இக்கதை காடுகளிலுள்ள ஒரு தொலைதூர கேபினில் இறந்தவர்களால் தாக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவைப் பின்தொடர்கிறது.
(தி ஈவில் டெட் ரைஸ்) பாகம்:5
ஈவில் டெட் ரைஸ் என்பது லீ க்ரோனின் எழுதிய அமெரிக்க திகில் திரைப்படமாகும். ஈவில் டெட் சீரிஸ் படங்கள் மீதான ஆர்வம் சற்றும் குறைவில்லாமல் இருந்ததால் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான இந்தப் பாகமும் சூப்பர் ஹிட்டாகி பாக்ஸ் ஆப்பிஸ் பெற்றது. உலகம் முழுவதும் $147 மில்லியனுக்கு மேல் வசூலித்தது.
தற்போது மீண்டும் 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஈவில் டெட் சீரிஸின் ஐந்தாவது பாகமாக ஈவில் டெட் ரைஸ் என்ற பெயரில் அடுத்த பாகம் உருவாகியுள்ளது.
இந்தப் படம் பழமையான கதைகளை அடிப்படையாகக் கொண்டு, அப்பார்மெண்ட் ஒன்றில் மூன்று மகள்களுடன் வசிக்கும் தாயின் மீது பேய் பிடிக்க, அவரிடமிருந்து குழந்தைகளும், அவரை காண வரும் சகோதரியும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பது போன்ற கதையம்சத்தில் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படம் முதலில் எச்பிஓ மேக்ஸ் என்ற நிறுவனத்தில் திரை வெளியிட இருந்தது. ஆனால், விநியோகிஸ்தர்கள் வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சோதனைக் காட்சிக்கு பிறகு அமெரிக்காவில் ஏப்ரல் 21, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
– ஆர். மகேஸ்வரி, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.