சென்னையிலிருந்து 4 மணி நேர விமான பயணத்தில் துபாய் சென்று விடலாம். இதனால் நம்ம ஊர் சினிமா நட்சத்திரங்கள் துபாயில் சொந்த வீடு வாங்கி, ஓய்வுப் பொழுதை அங்கே கழித்து வருகிறார்கள்.
தமிழ்த் திரை உலகில் அஜித், நயன்தாரா, யுவன் சங்கர் ராஜா உள்பட பலருக்கு துபாயில் வீடு உள்ளது.
தெலுங்கு, மலையாளத் திரை உலகில் பலரும் துபாயில் சொந்தமாக வீடு வாங்கி உள்ளனர்.
நடிகர் சிம்புவும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளார். துபாயில் சொந்தமாக ஒரு வில்லாவை சிம்பு வாங்கி இருக்கிறார்.
அஜித் வீட்டின் அருகே இருக்கும் இந்த ஆடம்பர இல்லத்தின் விலை ரூ.57 கோடி. இதற்கான அட்வான்ஸ் தொகை ரூ.22 கோடியை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்து இருப்பதாக கோடம்பாக்கத்தில் தகவல் உலா வருகிறது.
கடைசியாக 2025-ம் ஆண்டு வெளியான ‘தக் லைப்’ படத்தில் சிம்பு நடித்திருந்தார்.
கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்த படம், எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.
கலைப்புலி தாணு தயாரித்து வரும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
– பாப்பாங்குளம் பாரதி.