கவியரசர் கண்ணதாசன் தயாரிப்பில் 1963-ல் வெளியான திரைப்படம் வானம்பாடி.
எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, முத்துராமன், டி.ஆர்.ராஜகுமாரி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்காக, கே.வி.மகாதேவன் இசையில், அனைத்துப் பாடல்களையும் கவியரசர் கண்ணதாசனே எழுதியிருந்தார்.
ஜி.ஆர். நாதன் இயக்கிய இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசப்படும் பாடல்களாக அமைந்துள்ளது.
இதில் ‘கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்’ என்ற பாடல் பெரிய ஹிட் பாடலாக இன்றும் பலரின் விருப்பமாக பாடலாக உள்ளது. டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார்.
இந்தப் பாடலைப் பதிவு செய்யும்போது, டி.எம்.சௌந்திரராஜன் பாடாமல் அப்படியே நின்றுள்ளார். இதை கவனித்த கண்ணதாசன் என்ன ஆச்சு என்று கேட்க, இவன் காதலித்து செத்துபோய்டுவான்…
ஆனால், கடவுள் எப்படி சாக முடியும். மனிதன் தான் சாக முடியும் என்று சொல்ல, உடனடியாக பேனாவை எடுத்த கண்ணதாசன், கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும், அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் என்று மாற்றிக் கொடுத்துள்ளார்.
இந்தப் பாடல் முதலில், கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும், அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும் என்று கண்ணதாசன் எழுதியுள்ளார்.
பாடல் பதிவின்போது டி.எம்.எஸ் இந்தப் பாடலைப் பாடத் தயங்கியதால், அங்கேயே பாடல் வரிகளை கண்ணதாசன் மாற்றிக் கொடுத்து, இப்போது பாடுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த பாடல் காலத்தால் அழியாத ஒரு ஹிட் பாடல் என்று சொல்லலாம்.
– நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்