மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும், வி.என். ஜானகிக்கும் 1962-ம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி, முக்கியமான குடும்ப நண்பர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணம் நடைபெற்றது.
பிரபல பாரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தையும் பிரபல இயக்குனருமான கே.சுப்பிரமணியம் அவர்கள் திருமணப் பதிவில் சாட்சிக் கையொப்பம் இட்டார்.
அதன்பிறகு, மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான சின்னப்ப தேவர் ஒவ்வொரு வருடமும் தவறாமல் மக்கள் திலகத்தின் திருமண நாளில் நேரில் வந்து வாழ்த்து தெரிவிப்பார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மையாரை எல்லா திருமணம் மற்றும் குடும்ப நண்பர்கள் இல்ல விழாக்களுக்கும், இசைக் கச்சேரிகளுக்கும் அழைத்துச் சென்று சிறப்பு செய்தார்.
எம்.ஜி.ஆரின் அரசியல், திரைவாழ்வு, பொது வாழ்வு என எல்லாவற்றிலும் ஜானகி அம்மையார் முழு ஒத்துழைப்பைத் தந்து மக்கள் திலகத்தின் புகழுக்கு மேலும் புகழ் சேர்த்தார் என்பதே உண்மை.
மக்கள் திலகம் மறைவிற்குப் பின்னர் பிளவுபட்ட அதிமுகவின் இயக்கத்தை மீண்டும் இணைத்து, இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக இழந்த சின்னத்தை மீட்டு, மீண்டும் புரட்சித் தலைவரின் இரட்டை இலை சின்னமும் அதிமுக என்ற இயக்கமும் இன்றும் இயங்கிட முக்கியக் காரணம் திருமதி. ஜானகி அம்மையார்.
இந்திய அரசாங்கத்தின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” பட்டம் மக்கள் திலகத்திற்கு கிடைத்த போது அவரது சார்பாக திருமதி. ஜானகி அம்மையார் அவர்கள் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்.
சிறந்த திருமணத் தம்பதிகள் பட்டியலில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் – திருமதி ஜானகி அம்மையாரும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்கள்.