பெயருக்கு முன்பு நடிகன் என போட்டுக் கொள்பவன் எல்லாம் நடிகனல்ல. ‘இவரைப் போல் இன்னொருவர் நடிக்க முடியாது, வரவும் முடியாது என பெயர் வாங்குபவனே சிறந்த நடிகன்.
1947-ஆம் ஆண்டு தன அமராவதி எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் சந்திரபாபு.
சந்திரபாபு அவர்களின் ஆளுமை!
‘சபாஷ் மீனா’, திரைப்படத்தின் கதையை முதலில் கதாநாயகனான சிவாஜியிடம் சொல்லியிருக்கிறார்கள், பி.ஆர்.பந்துலுவும், ப.நீலகண்டன் அவர்களும்.
கதையைக் கேட்ட சிவாஜி நடிக்க ஒப்புக்கொண்டதோடு, Hero-வுக்கு சமமான நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு சந்திரபாபுவை புடியுங்கள் என்று சொல்லியாருக்கிறார்.
அவர்கள் இருவரும் சந்திரபாபுவை சந்தித்து சிவாஜி சொன்னதை சொல்ல, ‘அவர் Best actor அதனாலதான் என்னையை சிபாரிசு செய்திருக்கிறார்,’ என்று சொல்லி விட்டு கதையைக் கேட்டியிருக்கிறார். கதையைக் கேட்டு நடிக்க சம்மதம் வழங்கிய பிறகு அவர் ஒரே ஒரு கண்டிஷன் போட்டார்.
சிவாஜி கதாநாயகனாக இருந்தாலும் என்னோட கேரக்டருக்குதான் வேலை அதிகமாயிருக்கு. அதனால, அவரைக் காட்டிலும் ஒரு ரூபாயாவது சம்பளம் அதிகமா தரணும்,’ என்று சொன்னவுடன் இவர்கள் அதிர்ச்சியாகி பதிலேதும் சொல்லாமல் சிவாஜியிடம் வந்து முறையிட அவர் சந்திரபாபு சொன்னதையெல்லாம் பெரிதுபடுத்தாமல், ‘அவன் அப்படித்தான் லூசுத்தனமா பேசுவான். இதையெல்லாம் நாம பெருசுபடுத்தக் கூடாது.
இந்தக் கேரக்டரை பாபு நடிச்சாதான் Character நிக்கும். அவனைத் தவிர வேற யார் நடிச்சாலும் நல்லாவும் இருக்காது. அவனை விட்றாதீங்க அவன் கேக்கற சம்பளத்தை குடுத்து கமிட் பண்ணிருங்க”, என்று சொல்ல அதன்படியே சந்திரபாபுவை ஒப்பந்தம் செய்து, அக்கதையை படமாக்கி மிகப்பெரும் வெற்றி பெற்றார்கள்.
இந்தப் படத்தில், ரிக்சாக்காரன் கதாபாத்திரத்தில் அவர் பேசும் சென்னைத் தமிழை வேறு யாரும் பேசி நடித்திருக்க முடியாது.
திரைப்படங்களில் சந்திரபாபு பாடிய பெரும்பாலான பாடல்கள் மிகப்பெரிய ஹிட்தான்.
‘பிறக்கும் போதும் அழுகின்றாய்’,-படம்:கவலையில்லாத மனிதன்!
ஒண்ணுமே புரியலே உலகத்திலே-படம்:குமார ராஜா
நான் ஒரு முட்டாளுங்க-படம்:சகோதரி
புத்தியுள்ள மனிதரெல்லாம்-படம்:அன்னை
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது-படம்:போலீஸ்காரன் மகள்
உனக்காக எல்லாம் உனக்காக-படம்:புதையல்
சிரிப்பு வருது சிரிப்பு வருது-படம்:ஆண்டவன் கட்டளை
‘கல்யாணம் பண்ணியும் பிரம்மாச்சாரி ‘, திரைப்படத்தில் இவர் பாடிய, ‘ஜாலி லைஃப்’ எனும் பாடலுக்கு நடித்தவர் சிவாஜிகணேசன் அவர்கள்.
சாப்பாட்டிற்காக கஷ்டப்பட்ட காலத்தில் அவருக்கு அவ்வப்போது உதவி செய்தவர்கள் எடிட்டர் B.லெனின் அவர்களும் தேங்காய் சீனிவாசன் அவர்களும்தான்.
நடிகர் தேங்காய் சீனிவாசன் சந்திரபாபுவை தனது குருவாகவே மதிப்பளித்து வந்திருக்கிறார்.
இராயப்பேட்டை அரசுமருத்துவமனையில்தான் அவருடைய உயிர் பிரிந்துள்ளது. அவர் கேட்டுக்கொண்ட படியே இசையமைப்பாளர் M.S.விஸ்வநாதன் அவர்களிடமே அவருடைய உடல் ஒப்படைக்கப்பட்டது.
புயலாக தோன்றி புயலாகவே மறைந்து போனான் இந்த மகாகலைஞன்.
இனியொரு சந்திரபாபு தமிழ்சினிமாவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.
– சே மணிசேகரன்