விஜய்யின் ‘ஜனநாயகன்’ தெலுங்கு படத்தின் ரீ-மேக்?

எச்.வினோத் இயக்கத்தில் ‘இளையத் தளபதி’ விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் 9 ஆம் தேதி வெளியாகிறது. விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இதனிடையே, ‘பகவந்த் கேசரி’ என்ற தெலுங்கு படத்தின் கதையை, மூலமாக வைத்து ‘ஜனநாயகன்’ கதை உருவாக்கப்பட்டுள்ளதாக, சமூக வலைத்தளங்களில் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

‘பகவந்த் கேசரி’ 2023 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்தது. இதில் நடிகை ஸ்ரீலீலா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீலீலா கலந்து கொண்டார். அவரிடம், “ ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீ-மேக் தான் ஜனநாயகன் என்று சொல்கிறார்களே” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அவர் ஷாக் ஆனார்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆளை விடுங்க.. நான் விஜய்யின் தீவிர ரசிகை. உங்களைப்போல்  ‘ஜனநாயகன்’ படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று முடித்துக்கொண்டார் ஸ்ரீலீலா.

இதனிடையே ‘ஜனநாயகன்’ குறித்து சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தின் ரன்னிங் டைம் – 3 மணி நேரம் 6 நிமிடங்கள். ரிலீஸ் அன்று தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை. காலை 9 மணிக்கு ‘ஜனநாயகன்’ திரையிடப்படுகிறது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment