பேசும் படம்;
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் எங்கு சென்றாலும் அவரைக் காண கூட்டம் கூடிவிடுவது வழக்கம். அது அரசியலுக்கு வந்தபிறகு இன்னும் அதிகமாகியது. சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் தன்னைப் பார்க்க வரும் மக்களையும் அன்போடுப் பேசி அவர்களை நெகிழ வைப்பது எம்.ஜி.ஆரின் தனிக்குணம்.
குறிப்பு: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை பூங்காவில் நடைபெற்ற ‘மாட்டுக்கார வேலன்’ படப்பிடிப்பின்போது நாயகன் எம்.ஜி.ஆரும் நடிகை லட்சுமியும் அங்கிருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்து ஓய்வு எடுக்கும் காட்சி!
அவர்களுடன் படத்தின் இயக்குநர் ப.நீலகண்டன்!