‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான ‘லால் சலாம்’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்போது ரஜினிகாந்த், ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் த.ச. ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ராவ் ரமேஷ், ஷாஜி சென் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘வேட்டையன்’ படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது.
‘வேட்டையன்’ திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.