என்னை பிரமிக்க வைத்த அர்ஜூன் தாஸ்!

-இயக்குநர் பிஜோய் நம்பியார்

போர் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா!

சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் ‘போர்’.

டி.ஜே. பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரட்டை மொழிகளில் வரும் மார்ச் 1 முதல் வெளியாகவிருக்கிறது. ‘போர்’ திரைப்படத்தை T Series மற்றும் Roox Media இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

இப்படத்தின் டிரைலர் வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், போன்றோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நாயகி  சஞ்சனா நடராஜன்,  ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரையில் பார்க்காத சஞ்சனாவை நிச்சயமாக இதில் பார்ப்பீர்கள்.

படத்தில் நாயகர்களாக நடித்திருக்கும் இருவரும் எதிர் எதிர் கேரக்டர். காளிதாஸ் பேசிக்கொண்டே இருப்பார். அர்ஜூன் பேசவே மாட்டார். பானு எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார்.

எல்லோரும் அர்ஜூன் தாஸின் குரலைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவரின் நடிப்பைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர் அவ்வளவு டெடிகேட்டிவ் ஆன ஆர்டிஸ்ட். அவரைப் பற்றி ஒரு நிகழ்வை நான் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

படப்பிடிப்பில் ஒரு நாள் கோர்ட் செட்டப்பில் இரவு 2 மணிக்கு கொட்டும் மழையில் ஒரு சண்டைக் காட்சியை படம்பிடித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் அப்பொழுது தான் ஷாட் முடிந்து கேரவனுக்கு வந்து கொஞ்சம் கண் மூடலாம் என்று படுத்தோம்.

அதற்குள் அர்ஜூன் தாஸுக்கு சண்டைக் காட்சியில் அடிபட்டு ரத்தம் வருகிறது என்ற தகவல் வந்தது. பதட்டத்துடன் ஓடிப் போய் பார்த்தால் படப்பிடிப்பு போய்க் கொண்டு இருக்கிறது. அவர் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார். நாங்கள் அங்குள்ளவர்களிடம் கேட்டதற்கு ‘ஆமாம் ரத்தம் வந்தது’ அதைத் துடைத்துக் கொண்டு மீண்டும் சண்டை போட போய்விட்டார் என்றார்கள்.

ப்ரேக்கின் போது கேட்டதற்கு தரையில் விழுந்து பல் உடைந்துவிட்டது. பல் தானே.. பரவாயில்லை என்று கேசுவலாக கூறினார். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.. சின்ன தலைவலி என்றாலே பேக்கஃப் சொல்லிவிட்டு செல்லும் இக்காலத்தில் இப்படி ஒரு நடிகரா..? என்று வியந்தேன். இவ்வளவு டெடிக்கேட்டிவ் ஆன ஒரு ஆர்டிஸ்ட்டைப் பார்ப்பது கடினம்.

படம் குறித்து பேசிய இயக்குநர் பிஜோய் நம்பியார் ‘போர்’ திரைப்படம் ஒரு நேரிடையான தமிழ்ப்படம் எடுக்க வேண்டும் என்பதற்கான என்னுடைய மூன்றாவது முயற்சி ஆகும்.

ஷோலோ திரைப்படத்தையும் அந்த எண்ணத்தில் தான் உருவாக்கினேன். ஆனால் அதை தியேட்டர்களில் வெளியிட முடியாமல் போயிற்று.

பந்த் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் வந்து அதை தடை செய்துவிட்டது.

‘போர்’ திரைப்படம் ஒரு முழுமையான தமிழ்ப்படம். இதில் நடித்திருக்கும் முக்கிய நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் அனைவருமே தமிழ் தெரிந்தவர்கள். தமிழ் வெர்ஸனை மிகச் சிறப்பாக உருவாக்க எனக்கு ஸ்ரீகாந்த் உதவினார்.

இது ஒரு கலப்படமற்ற முழுத் தமிழ் திரைப்படம். கல்லூரி கால வாழ்க்கைத் தொடர்பானத் திரைப்படம். எனக்கு எப்போதுமே கல்லூரி தொடர்பான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் உண்டு. இப்படம் முழுக்க முழுக்க குறிப்பாக கல்லூரி செல்லும் இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்.

தமிழ்த் திரை உலகிற்குள் ஒரு தமிழ் திரைப்படத்தைக் கொண்டு நுழைய வேண்டும். தமிழ் பார்வையாளர்கள் என்னை ஒரு தமிழ் இயக்குநராகவே பார்க்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்படும் மூன்றாவது முயற்சி.

முதலில் இப்படத்தை மலையாளத்தில் எடுக்க வேண்டும் என்று தான் எண்ணினேன். பிறகு தமிழ் மற்றும் இந்தியில் எடுத்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. எனக்கு எப்போதும் தமிழ் வார்த்தைகளின் மீதும் அந்த ஒலி வடிவங்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் ஒரு மயக்கம், காதல் உண்டு.

இப்படத்தில் தமிழ் வடிவத்திற்கான வசனங்கள் மிகுந்த கவித்துவத்துவத்துடன் வந்திருப்பதாகத் தோன்றுகிறது.

படத்தைப் பற்றி பேசிய நாயகன் அர்ஜூன் தாஸ், படப்பிடிப்பின்போது இயக்குநர் எங்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார்.

காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் டேக் செல்வதற்கு முன்பு வரை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான்.

ரொம்பவே சேட்டை செய்வான். மற்றபடி மிகச்சிறந்த நண்பன். காளிதாஸ் உடன் சேர்ந்து நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது’ என்றார்.

Comments (0)
Add Comment