நடிகர் ஹரிஷ் கல்யாண் தன் ஒவ்வொரு படத்தின் வெற்றி மூலமும் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வளர்ந்து வருகிறார். அவரது அடுத்தப் படமான ‘பார்க்கிங்’ அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் பார்க்கிங் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
படம் வெளியாவதற்கு முன்பான ப்ரீ – ரிலீஸ் பிசினசும் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘பலூன்’ படத்தில் கே.எஸ். சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்துஜா கதாநாயகியாக நடிக்க, எம்.எஸ். பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். சரியான திட்டமிடல் மற்றும் அதை செய்லபடுத்துவதன் மூலமாக முழு படப்பிடிப்பையும் குறுகிய காலத்தில் படக்குழு முடித்துள்ளது.