மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த நடிகை நஸ்ரியா கடந்த 2010-ம் ஆண்டு நிவின் பாலிக்கு ஜோடியாக தமிழில் வெளியான ‘நேரம்’ படத்தில் அறிமுகமானார்.
ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா, பெங்களூர் டேஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர்.
மலையாளத்தில் முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
2014-ம் ஆண்டிற்கு பிறகு அவர் நடிக்காமலிருந்தார். வரதன், கும்ப்ளங்கி நைட்ஸ் உள்ளிட்டப் படங்களைத் தயாரித்த நஸ்ரியா, அதன்பிறகு கணவர் பகத் பாசிலுடன் வெளியான ‘ட்ரான்ஸ்’ என்ற படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.
பின்னர் தெலுங்கில் ‘அடடே சுந்தரா’ படத்தில் நானி உடன் நடித்திருந்தார். கடைசியாக கடந்த ஆண்டு நஸ்ரியா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சூக்சுமதர்ஷினி.
இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 47-வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் டிசம்பர் 8-ம் தேதி தொடங்கியது.
முதன் முதலாக சூர்யாவும், நஸ்ரியாவும் இணைந்து நடிக்க உள்ளதால், ரசிகர்களிடையே இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.