வள்ளுவரையும் வள்ளலாரையும் பின்பற்றிய எம்.ஜி.ஆர்.!

சின்னப்பயலே சின்னப்பயலே செய்தி கேளடா…

மனுஷன மனுஷன சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே..

திருடாதே பாப்பா திருடாதே

வறுமை நினைத்து பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே…

சிங்குமங்கு சிங்குமங்கு சிக்கபாப்பா
சிரித்து வாழ வேண்டும்…

போன்ற பாடல்கள் மூலம் குழந்தைகளுக்கு அறிவுரை புகட்டுவது போல…

அருமையான அற்புதமான ஆழமான அழகான சமூக மேன்மைக்கான கருத்துக்களை திரை வாயிலாகப் பரப்பினார் எம்.ஜி.ஆர்.

அந்த வரிசையில், பெற்றால்தான் பிள்ளையா என்கிற எம்.ஜி.ஆர் படத்தில்,

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
என்கிற பாடலும் அடங்கும்..

அருமையான அந்தப் பாடல் உங்கள் பார்வைக்கு…

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

(நல்ல நல்ல…)

தவறு என்பது தவறி செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்

(நல்ல நல்ல…)

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்…

(நல்ல நல்ல…)

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்…

(நல்ல நல்ல…)

அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப்போல்
அன்புக்கு வணங்கு வள்ளலாரைப் போல்
கவிதையை வழங்கு பாரதியைப்போல்..
மேடையில் முழங்கு திரு வி க போல்.

(நல்ல நல்ல…)

மேற்காணும் பாடலின் சரணத்தில் அன்புக்கு வணங்கு வள்ளலாரைப் போல் என்கிற அற்புதமான பாடல் வரியை வாலிபக் கவிஞர் வாலி அவர்கள் எழுதியிருப்பார்.

டி.எம்.எஸ் அவர்களின் கம்பீரக் குரலில் எம்.ஜி.ஆர் அவர்களின் அட்டகாசமான நடிப்பில் அப்பாடலை எத்தனை முறைக் கேட்டாலும் பார்த்தாலும் அத்துனை முறையும் தேனாக இனிக்கும்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறி கோடிக்கணக்கான ஏழை மக்களின் பசியை போக்கிய திருவருட்பிரகாச வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகள் பிறந்த தினமாகும்.

நன்றி : ஞானசித்தன் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment