‘மரகதமலை’ – குடும்பங்கள் கொண்டாடும் படம்!

அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மரகதமலை’.

எல்.ஜி. மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம், சிறுவர்களுக்கான சாகச காட்சிகளையும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய அம்சங்களையும் இணைத்து அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.

புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. 

தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.

எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி.சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

பா.விஜய், கே.டி.சேஷா பாடல்கள் எழுதியுள்ளனர். கே.தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தயாரிப்பு ஏற்பாட்டாளராக மல்லிகர்ஜுன ராவ் பணியாற்றியுள்ளார்.

கோடைக் கொண்டாட்டமாக ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘மரகதமலை’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியவை:

சினிமா எப்போதும் நல்லதாகவே இருக்கும்; நல்ல படங்களை எடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள். சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது. ஆனால் அதை சங்கங்கள் தான் பேசித் தீர்க்க வேண்டும்”

இயக்குநர் S.லதா பேசியவை:

‘மரகதமலை’ படம் பழைய காலத்து ராஜா–ராணி கதைகள், மந்திரவாதிகள், மிருகங்கள் போன்ற அம்சங்களுடன் ஒரு ஃபேண்டஸி கதை ஆக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன் கடின உழைப்புடன் உருவாக்கியுள்ளோம்.

தடா ஃபால்ஸில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. நாயகன் சந்தோஷ் பிரதாப் மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். டான்ஸ், ஃபைட் போன்ற காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

நாயகி தீப்ஷிகா தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார். ஜெகன், தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். 

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியவை:

“ ‘மரகதமலை’ போன்ற குழந்தைகளும் குடும்பங்களும் ரசிக்கும் படங்கள் இப்போது மிகவும் குறைந்து விட்டன. அதனால் இந்தப் படம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருவருக்கும் பிடிக்கும் ஒரு நல்ல படமாக இருக்கும்.”

தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் ராஜா பேசியவை:

“இன்றைய சூழலில் ஒரு படத்தைத் தயாரித்து வெளியிடுவது மிகவும் கடினமான ஒன்றாகி விட்டது. திரைத்துறை தற்போது பல சவால்களை சந்தித்து வருகிறது. சாட்டிலைட், டிஜிட்டல், ஓடிடி போன்ற உரிமைகள் கூட எளிதாக கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.

பல திரைப்படங்கள் தயாராக இருந்தும் வெளியீடு இல்லாமல் முடங்கி கிடக்கின்றன. இத்தகைய சூழலில் சிறு முதலீட்டில் உருவாகும் படங்களுக்கு ஊடகங்களும் திரைத்துறையும் ஆதரவு அளிக்க வேண்டும்.

ஒரு பெண்மணி இத்தனை முயற்சியுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது”

Comments (0)
Add Comment