‘தல’அஜித் குமாரின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் – ‘மங்காத்தா’. அஜித்தின் 50-ஆவது படம்.
யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, வெங்கட் பிரபு இயக்கி இருந்த இந்தப் படம் – 2011 ஆம் ஆண்டு வெளியானது. அஜித்தின் அட்டகாசமான நடிப்பு, இசை, வேகமான திரைக்கதை – எல்லாம் சேர்ந்து படத்தை மெகா ஹிட் ஆக்கியது.
‘மங்காத்தா’ இன்று வரை அஜித் கேரியரில் தனி இடம் பிடித்திருக்கிறது. முதன் முறையாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் தோன்றிய படம் இது.
‘மங்காத்தா’ திரைப்படம் ஜனவரி 23ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 450 திரைகளில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘மங்காத்தா’ படத்திற்கு மாபெரும் அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
விஜய்யின் கில்லி, ரஜினியின் படையப்பா ஆகிய படங்களின் ரீ-ரிலீஸைப் போல மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சொன்னாப்போனால் ரஜினி, விஜய் படங்களின் வசூல் சாதனையை அஜித் படம் முறியடித்துள்ளது.
ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இரண்டு நாட்களில், கில்லி 7 கோடியும், படையப்பா 8 கோடியும் வசூல் செய்தது. ஆனால், ‘மங்காத்தா’ உலக அளவில் 9 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி.