100 கோடி வசூலை ஈட்டிய மஞ்சும்மல் பாய்ஸ்!

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் 12 நாட்களில் 100 கோடி வசூலை ஈட்டி சாதனையை படைத்துள்ளது. கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள மலையாளப் படம் மஞ்சும்மல் பாய்ஸ்.

இந்த படம் மலையாள திரையுலகை காட்டிலும் தமிழகத்தில் மிக பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிப்ரவரி 22-ம் தேதி வெளியான இப்படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 25 கோடி ரூபாய் வசூல் செய்தது. படம் வெளியாகி 12 நாட்கள் ஆன நிலையில், உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment