எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான படம் ‘மங்கை’!

கயல் ஆனந்தி

குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்த்திருக்கு இப்படத்தின் டிரைலரை நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் இணையதளத்தில் வெளியிட்டனர்.

இதில் படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் பல முக்கிய திரைக்கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய   இயக்குநரும் நடிகருமான கவிதா பாரதி “ஒரு இயக்குநர் காத்திருந்தே இயக்குநர் ஆக முடியுமா, இல்லை சினிமாவை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விடுவாரா என்பது அவரின் மனைவியிடம் தான் இருக்கிறது.

இப்படம் இயக்குநராக முயற்சிப்பவர்களுக்கும், அவர்களுக்கு ஊக்கமாக இருந்து வரும் மனைவிமார்களுக்கும் சமர்ப்பணம். சாவித்ரி, ஸ்மிதா பட்டேல், நந்திதா தாஸ், அர்ச்சனா வரிசையில் அழுத்தமான கதாபாத்திரத்திற்கு எப்போதும் தயாராக இருப்பவர் ஆனந்தி.” என்றார்.

இதை தொடர்ந்து பேசிய நாயகன் துஷ்யந்த், இதன் படப்பிடிப்பை ஒரு நாயை வைத்துத் தான் துவங்கினோம். காரில் இரண்டு கேமராக்களை மாட்டி இருப்பார்கள். இதையும் பார்க்க வேண்டும், ரோட்டையும் பார்த்து கார் ஓட்ட வேண்டும்.

இதில் டயலாக்கை நினைவில் கொள்ள வேண்டும். உடன் நடிக்கும் நபர்களின் ரியாக்ஷன்களையும் கவனிக்க வேண்டும். இதை எல்லாம் கவனத்தில் கொண்டு நடித்த அனுபவம் சிறப்பாக இருந்தது.

கடைசியாக பேசிய நடிகை ஆனந்தி “இப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.

ஏனென்றால் சில படங்கள் தான் நடிகர் நடிகைகளுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும். இது அந்த மாதிரியான படம்.

இயக்குநர் எப்போதும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து யோசிப்பார், தயாரிப்பாளர் இயக்குநர் தரப்பில் இருந்து யோசிப்பார். இருவருக்குமான புரிதல் பார்க்கும் போதே அழகாக இருக்கும் என்றார்.

Comments (0)
Add Comment