ஸ்டார் என்ற கர்வம் எங்களுக்குக் கிடையாது!

நடிகர் மம்முட்டி உருக்கம்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போல, மலையாள சினிமாவின் இரு துருவங்கள் என்று அழைக்கப்படும் மம்முட்டியும் மோகன்லாலும் ஆரம்ப காலகட்டத்தில் இணைந்து படங்கள் நடித்தனர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு மம்முட்டியும், மோகன்லாலும் ‘பேட்ரியாட்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இதுகுறித்து மம்முட்டி கூறும்போது, “மோகன்லாலுடன் மீண்டும் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரு நடிகர் ஒரே கதாபாத்திரத்தை நூறு முறை செய்ய முடியாது. ஒவ்வொரு முறையும் புதுமை இருக்க வேண்டும்.

மலையாள சினிமா இன்னும் உலகளவில் பேசப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

நானும், மோகன்லாலும் எப்பொழுதும் ஸ்டார் என்ற கர்வத்தில் இருந்தது கிடையாது. ஸ்டார் என்ற பட்டத்தை நாங்கள் தலையில் சுமந்ததே கிடையாது.

நாங்கள் சாதாரண மனிதர்களாகவே இருக்கிறோம். ஆனால், நடிப்பில் எங்களுக்குள் போட்டி இருக்கும். புதிய படத்தில் அதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்றார்.

Comments (0)
Add Comment