ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் மெல்போர்ன் பன்னாட்டு திரைப்பட விழாவில் ‘மாமனிதன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட உள்ளது.
இதற்காக, தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் சீனு ராமசாமி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் அனைத்து கலைஞர்களையும் பாராட்டி வாழ்த்துகிறோம்.
மாமனிதன் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள ‘பண்ணைப்புரத்து சின்னக்குயிலு’ என்ற பாடலை பவதாரிணி பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் பன்னட்டுத் திரைப்பட விழாவில் மாமனிதன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதை பண்ணைப்புரத்து சின்னக்குயிலான பவதாரிணிக்கு சமர்பித்துள்ளது படக்குழு.