’லால் சலாம்’ முதல் நாள் வசூல்!

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா 8 ஆண்டுகளுக்கு பிறகு டைரக்ட் செய்துள்ள படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட் விளையாட்டை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் பிரதான வேடங்களில் நடித்துள்ள, இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார்.

பொங்கல் திருநாளில் ரிலீஸ் என முதலில் அறிவிக்கப்பட்டு, சில காரணங்களால் வெளியாகவில்லை.

உலகம் முழுவதும் திரை அரங்குகளில் நேற்று வெளியான ‘லால் சலாம்’ விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்களிடையேயும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. கவுரவ தோற்றத்தில் ரஜினி நடித்திருந்தாலும் முழுக்க முழுக்க ரஜினிகாந்த் படமாகவே விளம்பரம் செய்தனர்.

இதனால் படத்தின் வசூலும் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ‘லால் சலாம்’ படத்திற்கு முதல் நாளில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை. இந்திய அளவில் முதல் நாளில் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் மட்டும் வசூல் செய்துள்ளது.

உலக அளவில் லால் சலாம் படத்தின் வசூல் 7 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

கடைசியாக ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் 98 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் என்பதால் ‘லால் சலாம்’ வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment